மண் என்றால் என்ன?/ What is soil?
புவி மேற்பரப்பில் உள்ள பாறைகள் இரசாயன தாக்கம், பொறிமுறை தாக்கம் மற்றும் உயிரியல் தாக்கங்களுக்கு உட்பட்டு நுண்ணிய துகள்களாக மாற்றம் அடைவதையே "மண்" என்பர். புவி மேற்பரப்பில் உள்ள ஓர் சிறிய படையே மண் படை ஆகும். இதனை புவியோட்டின் மேல்படை என்றும் கூறுவர்.
மண் பௌதீக பண்புகள் மற்றும் இரசாயன பண்புகள் கொண்டுள்ளது.
மண்ணின் பௌதீக பண்புகள்
- 🗼மண்ணின் நிறம்
- 🗼மண்ணின் தரம்
- 🗼மண்ணின் இழையமைப்பு
- 🗼மண்ணின் ஈரப்பதம்
மண்ணின் இரசாயன பண்புகள்
- 🗼மண்ணின் PH பெறுமானம். உதாரணமாக:- 🏷️ மண்ணின் அமிலத் தன்மை , 🏷️மண்ணின் காரத் தன்மை
- 🗼மண்ணில் உள்ள கனிமங்கள்
மண்ணின் குறுக்குவெட்டு முகம்
மண்ணின் குறுக்கு வெட்டு முகத்தை நோக்கும் போது முழுமையாக வளர்ச்சி அடைந்த புவி மேற்பரப்பில் உள்ள மண் பிரதானமாக 5 படைகளை கொண்டது. அவையாவன:-
- 1️⃣O படை :- சேதனப்படை
- 2️⃣A படை :- மேற்பரப்பு படை
- 3️⃣B படை :- வளமான படை/ உப மண்படை
- 4️⃣C படை :- அடைந்த மூலம்
- 5️⃣R படை :- தாய்ப்பாறை/ பாறைபடுக்கை
இக் குறுக்குவெட்டு முகத்தில் உள்ள படைகள் ஒவ்வொன்றும் அதன் பண்புகளுக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
மண் உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் எவை?
- தாய்ப்பாறை
- காலநிலை
- காலம்
- தரைத்தோற்றம்
- நீர் மற்றும் வடிகால் அமைப்பு
- நுண்ணுயிர் மற்றும் விலங்கினங்களின் செயற்பாடுகள்
- மனித செயற்பாடுகள்
மண் தரமிழப்பிற்கான காரணிகள் எவை?
பழங்காலம் முதல் தாவர வளர்ச்சி மற்றும் விவசாயத்தின் வித்தாக காணப்படுவது மண் ஆகும். எனினும் இன்றைய பூகோளமயமான உலகில் மண் அதிகளவில் தரமிழக்கிறது. மண் தரமிழப்பிற்கு இயற்கை மற்றும் மானிட காரணிகள் பல செல்வாக்கு செலுத்துகின்றன.
👉மண் தரமிழப்பிற்கான இயற்கை காரணிகள்
- அமில மழை பொழிவு.
- தொடர்ச்சியான செறிவான மழைவீழ்ச்சி.
- சுனாமி தாக்கம்.
- வெள்ளப்பெருக்கு
- நிலச்சரிவு
👉மண் தரமிழப்பிற்கான மானிட காரணிகள்
- காடழிப்பு
- காட்டுத்தீ
- மண் மேற்பரப்பில் உள்ள மூடுதாவங்களை அழித்தல்.
- முறையற்ற விவசாய நடவடிக்கைகள். உதாரணமாக:- இரசாயன வளமாக்கி பயன்பாடு
- தொழிற்சாலையில் உள்ள இரசாயன கழிவுகள் மண்ணுடன் சேர்க்கப்படல்.
- தொடர்தேர்ச்சியாக ஓரின பயிர்ச்செய்கை மேற்கொள்ளல்.
- யுத்த செயற்பாடுகள்.
- சேனைப் பயிரச்செய்கை.
- அகழ்வு கைத்தொழில்
- முறையற்ற அபிவிருத்தி திட்டங்கள்.
- விவசாய தொழிநுட்ப வளர்ச்சிகள். உதாரணமாக:- பசுமை புரட்சி
- மிதமிஞ்சிய மந்தை மேய்ப்பால் மண் பாதிப்படையும்.